என் மலர்
செய்திகள்

மதுரை அருகே கல்லூரி மாணவி மாயம்
மதுரை அருகே கல்லூரி மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை அண்ணாநகர் வாஞ்சிநாதன் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகள் மணிமேகலை (வயது19).இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
சில நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற மணிமேகலை அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டமடைந்த பெற்றோர் தனது மகளை உறவினர் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடினர். பலன் இல்லை.
எனவே பன்னீர் செல்வம் அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமேகலை தானாகவே எங்கேனும் சென்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story