என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல்
    X

    சென்னை விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல்

    சென்னை விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை கடத்திய ஒருவரை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் இன்று காலை மஸ்கட் செல்லும் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்ல வந்த பயணிகளின் உடமைகளை மத்திய தொழிற்படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    தான்சானியா நாட்டை சேர்ந்த சுலைமான் என்பவரது சூட்கேசை 'ஸ்கேன்' செய்தபோது அதில் ரூ.20 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து அமெரிக்க டாலரை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சுலைமானிடம் விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×