என் மலர்

  செய்திகள்

  தமிழகம், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் ‘பங்க்’ மூடப்படும்
  X

  தமிழகம், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் ‘பங்க்’ மூடப்படும்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் ‘பங்க்’ செயல்படாது. மே மாதம் 14-ந்தேதியில் இருந்து அனைத்து பெட்ரோல் பங்க்குகளும் ஞாயிற்றுக்கிழமை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
  சென்னை:

  நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் ‘பங்க்’களை மூட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியது. அதன் அடிப்படையில் பல மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க் செயல்படாது என்று விற்பனையாளர்கள் அறிவித்தனர்.

  ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் கடந்த வாரம் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இந்த முடிவை மேற்கொண்டனர்.

  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகளை மூடுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்ஸ் அசோசியே‌ஷன் தலைவர் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் பங்க் செயல்படாது. மே மாதம் 14-ந்தேதியில் இருந்து அனைத்து பெட்ரோல் பங்க்குகளும் ஞாயிற்றுக்கிழமை இயங்காது. மத்திய அரசு கேட்டு கொண்டதற்கு இணங்க வாரத்தில் ஒருநாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. வாரத்திற்கு ஒருநாள் பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை விட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×