என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்குடியில் வீடு புகுந்து 15 பவுன் நகைகள் கொள்ளை
    X

    காரைக்குடியில் வீடு புகுந்து 15 பவுன் நகைகள் கொள்ளை

    காரைக்குடியில் வீடு புகுந்து 15 பவுன் நகை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    காரைக்குடி:

    காரைக்குடி காட்டுத் தலைவாசல் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் மஜித் (வயது 40). நேற்றிரவு இவர் வீட்டில் தூங்கினார். காற்றுக்காக கதவை திறந்து வைத்ததாக தெரிகிறது.

    அப்போது ஒரு மர்ம நபர் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 14 1/2 பவுன் தங்க நகைகள், 100 கிராம் வெள்ளி மற்றும் ரூ. 1,500 ஆகியவற்றை திருடிச் சென்று விட்டான்.

    இது குறித்து அப்துல்மஜித், காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் இளவேனில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×