என் மலர்

    செய்திகள்

    நீட் தேர்வில் தமிழக கிராம மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு: மத்திய மந்திரி தகவல்
    X

    நீட் தேர்வில் தமிழக கிராம மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு: மத்திய மந்திரி தகவல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கிராமப்புற மாணவர்களுக்காக நீட் தேர்வில் சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்படும். அந்த ஒதுக்கீட்டை மாநில அரசுகள் ஏற்று செயல்படுத்த வேண்டும் என மத்திய மந்திரி ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    மத்திய சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா இன்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு ஏழை எளிய மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களை தமிழ்நாட்டிலும் செயல்படுத்துவது பற்றி இன்று பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினேன்.

    பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்கள் ஏழை எளிய மக்களை பொருளாதாரத்தில் மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டிலும் இந்த திட்டங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

    ஆகையால் தமிழ்நாட்டில் பா.ஜனதா கட்சி விரைவில் மாற்று கட்சியாக உருவெடுக்கும். தமிழ்நாட்டில் பா.ஜனதா கட்சிக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது.

    நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க இயலாது. தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வை திட்டமிட்டப்படி கண்டிப்பாக நடைபெறும்.


    நீட் தேர்வால் கிராமங்களை சேர்ந்த ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது என்றும், எனவே அவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. நீட் தேர்வால் கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் ஒரு போதும் பாதிக்கப்பட மாட்டார்கள்.

    கிராமப்புற மாணவர்களுக்காக நீட் தேர்வில் சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்படும். அந்த ஒதுக்கீட்டை மாநில அரசுகள் ஏற்று செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×