என் மலர்

    செய்திகள்

    தி.மு.க. அனைத்து கட்சி கூட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூ. பங்கேற்கும்- ஜி.ராமகிருஷ்ணன்
    X

    தி.மு.க. அனைத்து கட்சி கூட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூ. பங்கேற்கும்- ஜி.ராமகிருஷ்ணன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    விவசாயிகள் நலனை பாதுகாக்கும் வகையில் தி.மு.க கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும் என ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    விவசாயிகள் நலனை பாதுகாக்கும் வகையில் தி.மு.க.அனைத்துக்கட்சி கூட்டத்தை நாளை கூட்டியுள்ளது.

    இந்த கூட்டத்தில் பா.ஜ.க. தவிர மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை விடுதலை சிறுத்தையும், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளும் ஏற்று கூட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.

    மு.க.ஸ்டாலின் ஒருங்கிணைக்கும் இந்த கூட்டத்தில் தி.மு.க.வின் ஆதரவு கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த நிலையில் நாளை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பங்கேற்கும் என்று அதன் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை தியாகராயநகரில் நடந்த மாநில செயற்குழுவில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் வரலாறு காணாத வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தற்கொலை, அதிர்ச்சி மரணம் தொடங்கியது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுத்துவருகிறது.


    இந்த நிலையில் தி.மு.க. அனைத்து கட்சி கூட்டத்தில் அழைப்பு விடுத்துள்ளது. நாளை நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×