என் மலர்
செய்திகள்

சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் மாரடைப்பால் மரணம்
சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க சுவாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
தஞ்சாவூர்:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவின் 2-வது அண்ணன் வினோதகனின் மகன் மகாதேவன் (வயது 47). இவர் தஞ்சை அருளானந்த நகரில் வசித்து வந்தார்.
இன்று காலை திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க சுவாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பால் மயக்கம் ஏற்பட்டது.
அவரை கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடலை தஞ்சைக்கு கொண்டு வந்தனர்.
தகவல் அறிந்து சசிகலா குடும்பத்தினர் மற்றும் அ.தி.மு.கவினர் வீட்டில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
மகாதேவன் ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளராக இருந்தார்.
அவரது தந்தை வினோதகன் பெயரில் தஞ்சையில் ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. அரசியல் ஈடுபாட்டை குறைத்த பிறகு அதை மகாதேவன் நிர்வகித்து வந்தார்.

Next Story