என் மலர்

  செய்திகள்

  ஆரணி ராணுவ கேன்டீன் மதுவை வெளியில் விற்ற பெண் கைது
  X

  ஆரணி ராணுவ கேன்டீன் மதுவை வெளியில் விற்ற பெண் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆரணியில் ராணுவ வீரர்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படும் மதுவை வாங்கி வெளியில் அதிக விலைக்கு விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

  ஆரணி:

  ஆரணி போக்குவரத்து பணிமனை அருகில் ராணுவ கேன்டீன் உள்ளது. இங்கு ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தேவையான பொருட்கள் சலுகை விலையில் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது.மதுவும் விற்கப்படுகிறது.

  அடையாள அட்டை காண்பித்து ராணுவ வீரர்கள் தேவையானவற்றை வாங்கி செல்கிறார்கள்.ராணுவ கேன்டீனில் வெளி நபர்கள் யாருக்கும் பொருட்களை விற்க அனுமதி இல்லை. அப்படி விற்றால் சட்ட விரோதமாகும்.

  தற்போது மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் ராணுவ கேன்டீன் மதுபானம் கள்ளத்தனமாக வெளியில் விற்கப்பட்டது. தரகர்கள் மூலம் ராணுவ கேன்டீன் அருகிலேயே சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக புகார் எழுந்தது.

  ராணுவ வீரர்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படும் மதுபானத்தை இடைத்தரகர்கள் மூலம் அதிக விலைக்கு மது பிரியர்களுக்கு கைமாற்றப்படுகிறது.

  மதுக்கடைகள் மூடிய பிறகு, ராணுவ கேன்டீனில் மது விற்பனையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர். அதிக விலை என்றாலும் மதுபானம் கிடைத்தால் போதும் என்ற ஆசையில் மது பிரியர்கள் முண்டியடித்துக் கொண்டு மதுபானம் வாங்க ராணுவ கேன்டீனை சுற்றி வலம் வருகிறார்கள்.

  இதுதொடர்பான புகாரில், ஆரணி தாலுகா போலீசார் தரகர்களை பிடிக்க தீவிரம் காட்டினர். இந்த நிலையில், ராணுவ கேன்டீனில் மது வாங்கி வெளியில் அதிக விலைக்கு விற்று வந்த பெண் தரகரை போலீசார் கைது செய்துள்ளனர்.

  விசாரணையில் கைது செய்யப்பட்ட பெண், வேலூரை சேர்ந்த ராமம்மாள் (வயது 55) என்பது தெரியவந்தது. ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

  Next Story
  ×