என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் அருகே கார் கவிழ்ந்து சென்னை சுங்கத்துறை அதிகாரி பலி
    X

    காஞ்சீபுரம் அருகே கார் கவிழ்ந்து சென்னை சுங்கத்துறை அதிகாரி பலி

    காஞ்சீபுரம் அருகே கார் கவிழ்ந்து சென்னை சுங்கத்துறை அதிகாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சீபுரம்:

    மேற்கு தாம்பரம், ஜோதி நகரைச் சேர்ந்தவர் பெத்து ராஜ் (வயது 58). சென்னையில் உள்ள மத்திய சுங்கத்துறையில் சூப்பிரண்டாகப் பணியாற்றி வந்தார். இவரது மகள் பிரியா (24) பி.டெக். முடித்து உள்ளார்.

    பிரியாவுக்கு பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக விசாரிப்பதற்காக நேற்று காலை பெத்துராஜ் மகளுடன் பெங்களூருக்கு காரில் சென்றார். பெத்துராஜ் காரை ஓட்டினார்.

    வேலை முடிந்ததும் இரவு இருவரும் காரில் சென்னை நோக்கி திரும்பி கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் காஞ்சீபுரத்தை அடுத்த பொன்னேரிக்கரை சென்னை- பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது.

    அப்போது காரின் பின் பக்க டயர் வெடித்தது. இதில் நிலைதடுமாறிய கார் சாலையோரத்தில் உருண்டு கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் பெத்து ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். பிரியாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த பிரியாவை சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான பெத்து ராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×