என் மலர்

  செய்திகள்

  முசிறி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
  X

  முசிறி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முசிறி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  முசிறி:

  முசிறி பார்வதிபுரம் பகுதியில் வசிப்பவர் ராஜாம்மாள் (வயது 55). இவர் தனது மகன் பாஸ்கரன் (36) என்பவருடன் வசித்து வந்தார். பாஸ்கருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. வேலை எதுவும் இல்லாமல் இருந்துள்ளார்.

  இந்த நிலையில் கடந்த 11ம் தேதி பகல் பாஸ்கரை வேலைக்கு போக சொல்லிவிட்டு ராஜாம்மாள் வெளியே சென்றுள்ளார். பின்னர் மீண்டும் மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது பாஸ்கர் படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இது குறித்த தகவலறிந்த முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×