என் மலர்

  செய்திகள்

  ஓசூரில் இன்று விபத்து: 3 பெண்கள் உள்பட 12 பேர் படுகாயம்
  X

  ஓசூரில் இன்று விபத்து: 3 பெண்கள் உள்பட 12 பேர் படுகாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஓசூரில் இன்று அதிகாலை டிப்பர் லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 3 பெண்கள் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

  ஓசூர்:

  திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருக்கு அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.

  இந்த பஸ்சை கிருஷ்ணகிரியைச் சேர்ந்த டிரைவர் குமரேசன் என்பவர் ஓட்டிவந்தார். கண்டக்டராக ரவி என்பவர் இருந்தார்.

  இந்த பஸ்சில் 40 பயணிகள் பயணம் செய்தனர். இன்று அதிகாலை 4 மணிக்கு இந்த பஸ் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சீத்தராம் நகர் பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது மோதியது.

  இதில் பஸ்சின் முன்பக்கம் சேதம் அடைந்தது. மொத்தம் 12 பேர் படுகாயம் அடைத்தனர். இதில் கண்டக்டர் ரவியின் கால் முறிந்தது. டிரைவர் குமரேசனும் படுகாயம் அடைந்தார்.

  படுகாயம் அடைந்த 12 பேரும் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 3 பேர் பெண்கள்.

  இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×