என் மலர்

  செய்திகள்

  காட்பாடி அருகே பள்ளி கட்டிடம் விபத்து: 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கித் தவிப்பு
  X

  காட்பாடி அருகே பள்ளி கட்டிடம் விபத்து: 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கித் தவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேலூர் காட்பாடி அருகே கோரந்தாங்கல் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பள்ளிக்கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானது. கட்டிட இடிபாட்டிற்குள் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி தவிப்பதாக கூறப்படுகிறது.
  வேலூர்:

  வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கோரந்தாங்கல் பகுதியில் புதிதாக பள்ளிக்கட்டடம் ஒன்று கட்டப்பட்டு கொண்டிருந்தது. இதற்கான கட்டுமான பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

  அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானது. புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் விபத்து ஏற்பட்டதை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு கூடினர்.

  கட்டிட இடிபாடுகளுக்குள் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி தவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  உடனடியாக போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ்

  வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன.

  மீட்பு பணிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
  Next Story
  ×