என் மலர்

  செய்திகள்

  பழனி கோவிலில் உண்டியல் மூலம் 22 நாட்களில் ரூ2¼ கோடி வருமானம்
  X

  பழனி கோவிலில் உண்டியல் மூலம் 22 நாட்களில் ரூ2¼ கோடி வருமானம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பழனி முருகன் கோவிலில் உண்டியல் மூலம் 22 நாட்களில் தொகையாக ரூ.2கோடி 22 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

  பழனி:

  பழனி முருகன் கோவிலில் கடந்த மாதம் 21-ந் தேதி உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. அதன்பின்னர் 22 நாட்களுக்கு பிறகு, மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது 22நாட்களில் தொகையாக ரூ.2கோடியே 22லட்சத்து 14ஆயிரத்து 215 கிடைத்து உள்ளது.

  இவை தவிர தங்கம் 740 கிராம், வெள்ளி 12,200 கிராம், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா, இங்கிலாந்து, கத்தார், சவுதிஅரேபியா போன்ற வெளிநாட்டு கரன்சி நோட்டுக்கள் 1043-ம் பக்தர்களால் காணிக்கையாக போடப்பட்டிருந்தது.

  தங்கத்தால் ஆன வேல், தாலி, சங்கிலி, மோதிரங்கள், வெள்ளி வேல், வெள்ளி அரணா, வெள்ளிப்பாதம், வெள்ளி அடுக்குமாடி வீடு, வெள்ளிக்கட்டிகள் மற்றும் வெள்ளி பொருட்களும் பட்டம், பரிவட்டம், நவதானியங்கள்,பாத்திரங்கள்,வெள்ளி குத்து விளக்குகள், கடிகாரம், பட்டு வேஷ்டி உள்ளிட்ட பல்வேறு பொருட்களும், பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

   

   

   

  Next Story
  ×