என் மலர்
செய்திகள்

வேலூர் அருகே பசுவை அடித்து கொன்றதாக 4 பேர் மீது வழக்குபதிவு
வேலூர் அருகே பசுவை அடித்து கொன்றதாக 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் அடுத்த சின்ன சித்தேரி பகுதியை சேர்ந்தவர் லதா (வயது 38). இவரது தாய் வீடு சிவநாதபுரத்தில் உள்ளது. இவர்கள் அங்கு பசுக்களை வளர்த்து வருகின்றனர். சம்பவத்தன்று அங்கு ஒரு பசு மாடு இறந்து கிடந்தது.
இது குறித்து லதா அரியூர் போலீசில் புகார் செய்தார். அதில் அதே பகுதியை சேர்ந்த ராஜா, கோதண்டம், தினேஷ், கோபால் ஆகியோர் முன்விரோதம் காரணமாக பசுவை இரும்பு கம்பியால் அடித்து கொன்று இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது என்று தெரிவித்துள்ளார். அதன்பேரில் ராஜா உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த பசு உடல் கால்நடை டாக்டர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்யபட்டது. டாக்டர்கள் அறிக்கை அடிப்படையில் 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
Next Story