search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கரூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் செறிவூட்டும் பணிகள்: கலெக்டர் ஆய்வு
    X

    கரூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் செறிவூட்டும் பணிகள்: கலெக்டர் ஆய்வு

    கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏரி, குளம் மற்றும் நீர்நிலைகளை மேம்படுத்தும் நிலத்தடி நீர் செறிவூட்டும் பணிகளை கலெக்டர் கோவிந்தராஜ் சென்று பார்வையிட்டார்.

    கரூர்:

    கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏரி, குளம் மற்றும் நீர்நிலைகளை மேம்படுத்தும் நிலத்தடி நீர் செறிவூட்டும் பணிகளை கலெக்டர் கோவிந்தராஜ் சென்று பார்வையிட்டார்.

    கடவூர் ஊராட்சி ஒன்றியம் மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி செல்லாண்டிபுரம் பகுதியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 2.10 லட்சம் மதிப்பில் மாட்டு கொட்டகை கட்டப்பட்டு நிறைவடைந்திருக்கிற பணிகளை கலெக்டர் பார்வையிட்டு கால்நடை பராமரிப்பு குறித்து கேட்டறிந்தார்.

    தென்னிலை ஊராட்சி திருமலைப்பாளையம் பகுதியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 13.05 லட்சம் மதிப்பில் முள்வேலி அமைத்து மரக்கன்று நடவு செய்யும் பணியினையும், தாய் திட்டத்தின் கீழ் ரூ. 15.22 லட்சம் மதிப்பில் மாரியம்மன் கோவில் குளத்தை சீரமைக்கும் பணியினை பலப்படுத்தவும் உரிய ஆலோசனைகளை வழங்கினார்.

    வரவணை ஊராட்சி குளத்தூர் பகுதியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 12.25 லட்சம் மதிப்பில் கருணாபுரத்தில் இருந்து பாப்பணம்பட்டி வரை வாரி தூர்வாரும் பணியினையும், சுண்டுகிளிப்பட்டி பகுதியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 14.85 லட்சம் மதிப்பில் சுண்டுகிளிப்பட்டியில் இருந்து அழகாபுரி சாலை வரை முள்வேலி அமைத்து மரக்கன்று நடவு செய்யும் பணியினையும் கலெக்டர் பார்த்தார்.

    வெள்ளப்பட்டி பகுதியில் தாய் திட்டத்தின் கீழ் ரூ. 20.90 லட்சம் மதிப்பில் கவுண்டன் குளத்தை சீரமைக்கும் பணியினையும், பஞ்சப்பட்டி குளத்தில் சீமைக்கருவேல முட்களை அகற்றும் பணியினையும் கலெக்டர் கோவிந்தராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கரூர் மாவட்டத்தில் நீர் நிலைகள், ஏரி, குளங்கள் ஏராளமாக உள்ளன. அகற்கேற்ப நீராதாரத்தை கெடுக்கும் சீமைக்கருவேல மரங்கள் நிறைந்தும், சீரமைப்பு இல்லாமலும் இருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசு குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள ஆணையிட்டுள்ளதை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகள் நிறைவுறும் நேரத்தில் மழை பெய்தால் நல்ல நீர் தேங்கி நிலத்தடி நீர் சேமிக்கவும் எதிர்வரும் வறட்சி காலங்களில் நீரை பயன்படுத்தவும் உதவிட மாவட்ட நிர்வாகம் குடிமராமத்து பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

    இவ்வாறு கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

    ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, உதவி கலெக்டர் கோவிந்தராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×