என் மலர்

  செய்திகள்

  கடலூரில் வாகனம் மோதி தொழிலாளி பலி
  X

  கடலூரில் வாகனம் மோதி தொழிலாளி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடலூர் பச்சையாங்குப்பம் பகுதியில் சாலையோரம் முட்புதரில் காயங்களுடன் ஆண் பிணம் கிடந்தது. அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
  கடலூர்:

  கடலூர் முதுநகரை அடுத்த பச்சையாங்குப்பம் பகுதியில் சாலையோரம் முட்புதரில் காயங்களுடன் ஆண் பிணம் கிடந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

  போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆண் பிணத்தை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இறந்தவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தினர். அப்போது இறந்தவரின் பெயர் ராஜா(வயது 30). சேலம் மாவட்டம் வடக்கு முல்லைவாடி கிராமத்தை சேர்ந்தவர் கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள குத்துவிளக்கு தயாரிக்கும் தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார் என்று தெரிந்தது. அவர் அடையாள தெரியாத வாகனம் மோதி இறந்தார் என முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

  மேலும் பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×