search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகளை அடித்து கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை: நாமக்கல் கோர்ட்டு உத்தரவு
    X

    மகளை அடித்து கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை: நாமக்கல் கோர்ட்டு உத்தரவு

    பெற்ற மகளை குடும்பத்தகராறில் அடித்து கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை வழங்கி நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் ஆயில்பட்டி உடையாப்பாளையம் கார்கூடல் பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(57). இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார்.

    இவர்களுடைய மகள் பழனியம்மாள். இவர் வளையப்பட்டியைச் சேர்ந்த ராமு என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.

    இந்த நிலையில் பழனியம்மாள் நீண்ட நாளாக தனது தந்தை வீட்டிற்கு செல்லாமல் இருந்தார். இதனால் ராஜேந்திரனுக்கும், லட்சுமிக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இது குறித்து தகவலறிந்த பழனியம்மாள் கடந்த 29-9-2013ந் தேதியன்று தனது தந்தை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு கணவன்-மனைவி இருவரும் தகராறில் ஈடுபட்டு இருந்தனர்.

    அங்கு வந்த பழனியம்மாளை கண்டு கணவன்-மனைவி இடையே தகராறுக்கு காரணமாக இருந்ததால் ஆத்திரம் அடைந்த அவர் அருகில் இருந்த பனைமட்டையை எடுத்து பழனியம்மாளை தாக்கினார். இதில் அவருக்கு கழுத்தில் அடிபட்டு காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இதுகுறித்து ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்து சிறையில் அடைந்தனர்.

    இந்த நிலையில் இன்று நாமக்கல் மகளிர் கோர்ட்டில் இந்த வழக்கு மீது விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி இளங்கோ விசாரித்தார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோ பெற்ற மகளையே குடும்பத்தகராறில் அடித்து கொலை செய்த ராஜேந்திரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படும் என உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.

    Next Story
    ×