என் மலர்

  செய்திகள்

  பெரும்பாறை அருகே வீட்டுக்கதவை உடைத்து 15 பவுன்-பணம் கொள்ளை
  X

  பெரும்பாறை அருகே வீட்டுக்கதவை உடைத்து 15 பவுன்-பணம் கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெரும்பாறை அருகே வீட்டுக்கதவை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

  பெரும்பாறை:

  திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள கே.சி.பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன். இவர் குடும்பத்துடன் சொந்த வேலைக்காக வீட்டை பூட்டி விட்டு மதுரை சென்று விட்டார். வேலை முடிந்ததும் இவர்கள் திரும்பி வந்து பார்த்த போது வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்ததது.

  உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை 15 பவுன், பணம் ரூ.12 ஆயிரம், மற்றும் வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போய் இருந்தது.

  இதுகுறித்து தாண்டிக்குடி போலீசில் காளியப்பன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

  Next Story
  ×