என் மலர்

    செய்திகள்

    மதுரை வண்டியூரில் பேக்கரி மேலாளருக்கு அரிவாள் வெட்டு: ரவுடி கைது
    X

    மதுரை வண்டியூரில் பேக்கரி மேலாளருக்கு அரிவாள் வெட்டு: ரவுடி கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மதுரை வண்டியூரில் பேக்கரி மேலாளருக்கு அரிவாள் வெட்டு ரவுடி கைது

    மதுரை, ஏப். 12-

    பேக்கரி மேலாளரை வாளால் வெட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்

    மதுரை அண்ணாநகரில் உள்ள ஒரு பேக்கரியில் மேலாளராக பணிபுரிபவர் வணங்காமுடி. நேற்று இவர் கடையில் இருந்தபோது அண்ணாதெருவை சேர்ந்த வாழைப்பழம் முருகன் (வயது40) என்ற ரவுடி கடைக்கு வந்து பணம் தருமாறு மிரட்டியுள்ளான்.

    ஆனால் வணங்காமுடி பணம் தரமுடியாது என்று கண்டிப்புடன் கூறிவிட்டார். இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் வாழைப்பழம் முருகன் தான் மறைத்து வைத்து கொண்டு வந்த வாளால் அவரை சரமாரியாக வெட்டினார். படுகாயமடைந்த வணங்கா முடி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து பேக்கரி கடையின் காசாளர் ராம்நாத் கொடுத்தபுகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாழைப்பழம் முருகனை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×