என் மலர்

  செய்திகள்

  பூண்டி ஏரி உபரிநீர் வீணாவதை தடுக்க கொசஸ்தலை ஆற்றில் புதிய தடுப்பணை: அதிகாரிகள் ஆய்வு
  X

  பூண்டி ஏரி உபரிநீர் வீணாவதை தடுக்க கொசஸ்தலை ஆற்றில் புதிய தடுப்பணை: அதிகாரிகள் ஆய்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பூண்டி ஏரி உபரிநீர் வீணாவதை தடுக்க கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ. 7 கோடி செலவில் புதிய தடுப்பு அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
  ஊத்துக்கோட்டை:

  சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைகளை நிறைவேற்றும் பிரதான ஏரியில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுகிறது.

  பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இந்த ஏரி முழுவதுமாக நிரம்பினால் உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம்.

  இப்படி திறந்து விடப்படும் தண்ணீர் பூண்டி, ஆற்றம்பாக்கம், காரனோடை வழியாக பாய்ந்து வங்க கடலில் வீணாக கலக்கிறது.

  கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த பேய் மழைக்கு பூண்டி அணை முழுவதுமாக நிரம்பியதால் உபரி நீர் வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி வீதம் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

  அப்போது சுமார் 20 டி.எம்.சி. தண்ணீர் வீனாக வங்கக் கடலில் கலந்தது. பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் மொத்தம் 11.05 டி.எம்.சி. தண்ணீர் தான் சேமித்து வைக்க முடியும்.

  கோடை காலங்களில் பூண்டி ஏரி முழுவதுமாக வறண்டு போவதால் சென்னையில் குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது. இதனை போக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் பல்வேறு மாற்று வழிகளை கண்டறிந்து வருகிறார்கள்.

  அதில் ஒரு அங்கமாக பூண்டி ஏரியிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் ஆற்றம்பாக்கம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ. 7 கோடி செலவில் தடுப்பு அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

  இதற்காக பொதுப் பணித்துறை கண்காணிப்பாளர் பக்தவச்சலம், செயற் பொறியாளர் விஜயகுமார், உதவி செயற்பொறியாளர் செல்வம், உதவிப் பொறியாளர் சிவகுமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

  இங்கு தடுப்பு அணை கட்டினால் விவசாயிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். மேலும் இங்கு சேமித்து வைக்கும் தண்ணீரை சென்னை குடிநீருக்கு கொண்டு செல்ல வாய்ப்பும் ஏற்படும்.
  Next Story
  ×