என் மலர்

    செய்திகள்

    சேகர்ரெட்டியுடன் விஜயபாஸ்கருக்கு தொடர்பு உள்ளதா?: வருமான வரித்துறை விசாரிக்க திட்டம்
    X

    சேகர்ரெட்டியுடன் விஜயபாஸ்கருக்கு தொடர்பு உள்ளதா?: வருமான வரித்துறை விசாரிக்க திட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சேகர்ரெட்டியுடன் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தொடர்பு உள்ளதா? என வருமான வரித்துறை விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். இவர் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர். சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் 1½ லட்சம் வாக்காளருக்கு தலா ரூ. 4 ஆயிரம் வீதம் பணப்பட்டுவாடா நடந்தது.

    அதைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகள், கல்வி நிறுவனங்கள், குவாரிகள், உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட 35 இடங்களில் கடந்த 7-ந்தேதி வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.

    சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் எழும்பூர் விடுதியில் இருந்து ஆர்.கே.நகரில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா நடந்ததற்கான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ரொக்கம் ரூ. 5 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆஜராகி சுமார் 4½ மணி நேரம் விளக்கம் அளித்தார்.


    இதற்கிடையே தொழில் அதிபரும், காண்டிராக்டருமான சேகர்ரெட்டியுடன் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தொடர்பு இருக்கலாம் என வருமான வரித்துறையினர் கருதுகின்றனர்.

    சேகர்ரெட்டி ஆற்று மணல் காண்டிராக்டு எடுத்து விற்பனை செய்து வந்தார். அவரை அ.தி.மு.க. பிரமுகர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அறிமுகம் செய்து வைத்ததாக தெரிகிறது.

    அதன் மூலம் ஆற்று மணல் வியாபாரத்தில் சேகர் ரெட்டியுடன் விஜயபாஸ்கர் மறைமுக பங்குதாரராக செயல்பட்டு இருக்கலாம் என வருமான வரித்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

    எனவே சேகர்ரெட்டியுடன் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தொடர்பு உள்ளதா? என விசாரணை நடத்த வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது.
    Next Story
    ×