என் மலர்

    செய்திகள்

    கும்பகோணம் அருகே டாஸ்மாக் கடை அமைப்பதை கண்டித்து சாலை மறியல்
    X

    கும்பகோணம் அருகே டாஸ்மாக் கடை அமைப்பதை கண்டித்து சாலை மறியல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கும்பகோணத்தை அடுத்த கொரநாட்டுக்கருப்பூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறப்பதை கண்டித்து சென்னை பைபாஸ் சாலையில் அப்பகுதியினர் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தை அடுத்த கொரநாட்டுக்கருப்பூர் ஊராட்சி புளியந்தோப்பு பகுதியில் நேற்று மாலை டாஸ்மாக் கடை அமைப்பதற்காக செங்கல் இறக்கினர்.

    இதனையறிந்த அப்பகுதியினர் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என்று கூறினார்கள். ஆனால் டாஸ்மாக் நிர்வாகம் கண்டுகொள்ளாமல் கடை அமைக்கும் பணியினை செய்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொது மக்கள் மற்றும் புரட்சிகர மாணவர்கள் முன்னணி அமைப்பின் நிர்வாகி தங்கதமிழன் தலைமையில் டாஸ்மாக் கடையை அமைக்ககூடாது என்றும் டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்தும் கும்பகோணம்-சென்னை பைபாஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனையறிந்த தாசில்தார் மனோகரன் மற்றும் போலீசார் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பின்பு இந்த கிராமத்தில் டாஸ்மாக் கடையை அமைக்க மாட்டோம் என்று எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்ததின் போல் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் கும்பகோணம்-சென்னை சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

    Next Story
    ×