என் மலர்

  செய்திகள்

  மேலூர் அருகே டாஸ்மாக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் முட்களை போட்டு பொதுமக்கள் போராட்டம்
  X

  மேலூர் அருகே டாஸ்மாக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் முட்களை போட்டு பொதுமக்கள் போராட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேலூர் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் முட்களை போட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
  மேலூர்:

  மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூர் ரோட்டில் உள்ள ஆண்டிப்பட்டியில் புதிதாக டாஸ்மாக் மதுபானக்கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  மேலூர்- திருவாதவூர் சாலையில் குறுக்கே கருவேல முட்களை வெட்டிப் போட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  தகவல் அறிந்த தாசில்தார் தமிழ்ச்செல்வி மற்றும் மேலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது இந்தப்பகுதியில் திறக்கப்பட்ட மதுக்கடையை நிரந்தரமாக மூடினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று பொதுமக்கள் கூறினர்.

  இதனால் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் நீடித்தது. கடைசியில் வேறு வழியின்றி கடையை காலிசெய்து விட்டு அதிகாரிகள் கிளம்பிச் சென்றனர். அதன்பின்னர் போராட்டத்தை கைவிட்டு பொது மக்கள் கலைந்து சென்றனர்.

  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உப்புதூர் விலக்கு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் டாஸ்மாக் போர்டு இல்லாமல் நேற்று புதிதாக மது பானக்கடை திறக்கப்பட்டது.

  இதனை தொடர்ந்து முள்ளுசேவல், முத்து சாமியாபுரம், சமத்துவபுரம், பெருமாள்பட்டி, சுப்பரமணியபுரம், உள்ளிட்ட கிராமமங்களை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உப்பத்தூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர் உடனே மதுபானகடை மூடப்பட்டது.

  சுமார் 2 மணி நேரம் மறியல் நடந்தது. சாத்தூர் டி.எஸ்.பி. குமார் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மதுபானக்கடையை நிரந்தரமாக மூடப்படும் என உறுதியளித்தபின் பெண்கள் கலைந்து சென்றனர்.
  Next Story
  ×