என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழவந்தாங்கலில் டாஸ்மாக் கடையில் ரூ. 6½ லட்சம் கொள்ளை
    X

    பழவந்தாங்கலில் டாஸ்மாக் கடையில் ரூ. 6½ லட்சம் கொள்ளை

    பழவந்தாங்கலில் டாஸ்மாக் கடையில் ரூ. 6½ லட்சம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    பழவந்தாங்கல் அருகே உள்ள மூவரசன்பேட்டை, கிருஷ்ணா நகரில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று இரவு விற்பனை முடிந்து ஊழியர்கள் கடையை பூட்டிச் சென்றனர்.

    நள்ளிரவில் வந்த 3 பேர் கும்பல் மதுக்கடை ‌ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த ரூ. 6 லட்சத்து 78 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்தனர். மேலும் 3 பெட்டி மதுபாட்டில்களையும் எடுத்து வெளியே வந்தனர்.

    அந்த நேரத்தில் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் மார்ட்டின், பாஸ்கர் ஆகியோர் வெளியே வந்தனர். அவர்கள் கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர்.

    இதற்குள் கொள்ளை கும்பல் 2 மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். அப்போது அவ்வழியே ரோந்து வந்த போலீஸ்காரர் ரவியும் அவர்களை மடக்க முயன்றார்.

    ஆனால் கொள்ளையர்கள் மதுபாட்டில் பெட்டியை வீசி விட்டு ரூ. 6 லட்சத்து 78 ஆயிரத்துடன் தப்பி சென்று விட்டனர். இது குறித்து பழவந்தாங்கல் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×