என் மலர்

  செய்திகள்

  கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சி
  X

  கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 2 நாட்களாக காய்கறி விலை குறைந்துள்ளது. தக்காளி கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  சென்னை:

  கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 2 நாட்களாக காய்கறி விலை குறைந்துள்ளது.

  ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து காய்கறிகள் லாரி மூலம் அதிகம் கொண்டு வரப்படுவதுடன் காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் அதிகம் வருகிறது.

  இதன் காரணமாக காய்கறி விலை குறைந்து வருகிறது. 1 கிலோ தக்காளி ரூ. 30 வரை இதற்கு முன்பு விற்கப்பட்டது. ஆனால் இப்போது கிலோ ரூ. 10 முதல் ரூ. 15 வரை விற்கப்படுகிறது.

  உருளைக்கிழங்கு கிலோ ரூ. 25-ல் இருந்து ரூ. 20 ஆகவும், வெண்டைக்காய் கிலோ ரூ. ரூ. 40-ல் இருந்து ரூ. 30 ஆகவும் குறைந்து விட்டது.

  பெரிய பாகற்காய் கிலோ ரூ. 40-ல் இருந்து ரூ. 30 ஆகவும் குறைந்துள்ளது. இதேபோல் கேரட், நூல்கோல், சவ்சவ், பீட்ரூட், கோஸ், பெரிய வெங்காயம் விலையும் வேகமாக குறைந்து விட்டது.

  கோடை காலமாக இருந்தாலும் ஆந்திரா, கர்நாடகா, மாநிலங்களில் இருந்து அதிக அளவில் காய்கறிகள் வருகிறது.

  ஆனாலும் வியாபாரம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதற்கு முன்பு ரூ. 2 கோடி அளவுக்கு கோயம்பேட்டில் வியாபாரம் நடைபெறும். இப்போது ரூ. 1 கோடிக்கு தான் வியாபாரம் நடைபெறுகிறது.

  கோயம்பேடு மட்டுமல்லாமல் பெரம்பூர், வில்லிவாக்கம், வேளச்சேரி, குரோம்பேட்டை, அனகாபுத்தூர், பம்மல், தாம்பரம், மேடவாக்கம், திருவான்மியூர், அம்பத்தூர் உள்பட பல்வேறு சிறிய மார்க்கெட்டுகளிலும் வியாபாரம் குறைந்து விட்டது.

  இதற்கு பணப்புழக்கம் குறைந்ததும் ஒரு காரணமாகும். விளைச்சல் அதிகமான நிலையில் வாங்கும் சக்தி குறைந்ததால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றனர்.

  Next Story
  ×