search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குருத்தோலை ஞாயிறையொட்டி விழுப்புரம் பகுதியில் கிறிஸ்தவர்கள் பவனி
    X

    குருத்தோலை ஞாயிறையொட்டி விழுப்புரம் பகுதியில் கிறிஸ்தவர்கள் பவனி

    குருத்தோலை ஞாயிறையொட்டி விழுப்புரம் பகுதியில் கிறிஸ்தவர்கள் குருத்தோலையுடன் பவனியாக சென்றனர்.
    விழுப்புரம்:

    ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு எருசலேம் நகரத்துக்குள் ஒரு கழுதைக்குட்டிமேல் அமர்ந்து வரும் போது, மக்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளை பிடித்து ஓசன்னா பாடல்களை பாடினர். அந்த சம்பவத்தை நினைவு கூரும் வகையில், உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் விழுப்புரம் அருகே காணை கிராமத்தில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் நேற்று குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அருள் தந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் கிறிஸ்தவர்கள் கைகளில் குருத்தோலை ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் ஆலய வளாகத்தை வந்தடைந்தனர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து புனித அந்தோணியார் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதுபோல் விழுப்புரம் நகரில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலயம், தூய ஜேம்ஸ் ஆலயம், கீழ்பெரும்பாக்கம் புனித சவேரியார் ஆலயம் உள்பட பல்வேறு ஆலயங்களில் குருத்தோலையுடன் கிறிஸ்தவர்கள் ஊர்வலம் சென்றனர்.

    மூங்கில்துறைப்பட்டு அருகே ஈருடையாம்பட்டு தூயவின்னரசி ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறையொட்டி கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலைகளை பிடித்தபடி பவனியாக சென்றனர். இதையடுத்து ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனையுடன் திருப்பலி நடைபெற்றது.

    இதேபோல் சவேரியார்பாளையதில் உள்ள அந்தோணியார் ஆலயம், அருளம்பாடி ராயப்பர், சின்னப்பர் ஆலயம், மைககேல்புரத்தில் உள்ள புனித மிககேல் அதிதூதர் உள்ளிட்ட ஆலயங்களில் கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் பிடித்துக்கொண்டு பவனி சென்றனர்.
    Next Story
    ×