என் மலர்

  செய்திகள்

  பழங்குடியின மக்களுக்கு ரூ.88½ கோடி நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் சங்கர் தகவல்
  X

  பழங்குடியின மக்களுக்கு ரூ.88½ கோடி நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் சங்கர் தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பண்டை பழங்குடியினர் வாழ்வில் வசந்தத்தை கொண்டு வரவேண்டும் என்பதற்காக ரூ.88.4 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் சங்கர் கூறினார்.

  ஊட்டி:

  ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் பழங்குடியினருக்கான மாபெரும் மருத்துவ முகாம் நடந்தது. முகாமை மாவட்ட கலெக்டர் சங்கர் தொடங்கி வைத்து பேசியதாவது:-

  நீலகிரி மாவட்டத்தின் மூத்த குடிமக்கள் பழங்குடியின மக்கள் ஆவார்கள்.

  பண்டை பழங்குடியினர் வாழ்வில் வசந்தத்தை கொண்டு வரவேண்டும் என்பதற்காக கடந்த 5 ஆண்டுகளில் ரூ.88.4 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளது. ஒவ் வொரு பழங்குடியினர் கிராமங்களிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. படித்த வேலையில்லாத பட்டதாரிகளுக்கு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு, காவலர் பணியில் சேர 10-ம் வகுப்பு படித்த வர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

  வனப் பகுதியிலிருந்த பள்ளிக்கு சென்று வரும் 743 பள்ளி மாணவ, மாணவி களுக்கு போக்குவரத்து படிவமும், 299 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு படிவத்திற்கு வருடத்திற்கு 3 லட்சம் செலவிடப்படுகிறது. மேலும் அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

  பழங்குடியின மக்களின் வாழ்வை மேம்படுத்த 46 சிறப்பு வறுமை ஒழிப்பு சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு ஒவ்வொரு சங்கத்திற்கு ரூ.4 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை தனி நபர் கடனாக 819 நபர் களுக்கு ரூ.67.3லட்சம் வழங்கப் பட்டுள்ளது. பால்பண்ணை மற்றும் மளிகை கடை வைக்க 398 பயனாளிகளுக்கு ரூ.1.3 கோடி மானியத்துடன் வழங்கப் பட்டுள்ளது. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளில் பழங்குடியின பெண்களுக்கு ரூ.43 லட்சம் பணமும், 500 கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.

  இவ்வாறு கலெக்டர் சங்கர் கூறினார்.

  நிகழ்ச்சியில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநர் தீபக் ஸ்ரீவத்சவா, போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, மாவட்ட வருவாய் அலு வலர் பாஸ்கர பாண்டியன், இணை இயக்குநர் சுகாதார பணிகள் செல்வராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×