என் மலர்

  செய்திகள்

  ராமநாதபுரம் தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு
  X

  ராமநாதபுரம் தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் நடராஜன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
  ராமநாதபுரம்:

  வட்டாட்சியர் அலுவலகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள், உள்பட உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பதிவேடுகளை ஆய்வு செய்ததோடு, பொது மக்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களை உரிய முறையில் ஆய்வு செய்து தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

  அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் வறட்சியை போக்கிடும் வகையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் செய்யதம்மாள் அறக்கட்டளையின் சார்பாக மரக்கன்றுகள் நடும் பணியினைத் துவக்கி வைத்தார். நடப்பாண்டில் 5000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன.
  Next Story
  ×