என் மலர்

  செய்திகள்

  ஜோலார்பேட்டை அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் நகை, பணம் திருட்டு
  X

  ஜோலார்பேட்டை அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் நகை, பணம் திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜோலார்பேட்டை அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

  ஜோலார்பேட்டை:

  ஜோலார்பேட்டையை அடுத்த சின்னமூக்கனூர் மாயன்வட்டத்தை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 55), ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.

  இவர் சென்னையில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றார். பின்னர் அங்கிருந்து சம்பவத்தன்று வீட்டிற்கு வந்தார். அங்கு வீட்டின் வெளிக்கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த காளிமுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

  அங்கு பீரோவை உடைத்து அதில் இருந்த 6 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.70 ஆயிரம் மற்றும் அறையில் இருந்த டி.வி. ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

  இதுகுறித்து காளிமுத்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×