என் மலர்
செய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுக்கும் விவகாரம்: வேட்பாளர் மீண்டும் போட்டியிடுவதை தடுக்கவேண்டும் - ஜவாஹிருல்லா
ஓட்டுக்கு பணம் கொடுக்கும் விவகாரம் தொடர்பாக வேட்பாளர் மீண்டும் போட்டியிடுவதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
சென்னை:
மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது தமிழகத்தில் ஜனநாயக நெறிமுறைகள் பணநாயகம் என்ற புற்று நோயால் பீடிக்கப்பட்டுள்ளதற்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.
ஆர்.கே. நகர் தொகுதி தேர்தலை ரத்து செய்து விட்டதால் நியாயமான தேர்தலை நடத்தும் சூழல் உருவாகும் என்று காலத்தை தள்ளிப் போடுவதால் எவ்வித மாற்றமும் ஏற்பட போவதில்லை.
தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தும் விதிமுறைகளில் தலைகீழ் மாற்றம் கொண்டுவந்தால் தான் நியாயமான தேர்தல் நடத்தும் சூழல் ஏற்படும். நியாயமான விசாரணை நடத்தி பணம் கொடுத்த வேட்பாளர் மற்றும் அவர் சார்ந்த கட்சி அந்த தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்.
போட்டியிடும் அனைத்து கட்சிகளுக்கும் சமவாய்ப்பு அளிக்கும் வகையில் ஒவ்வொரு தேர்தலில் போதும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு புதிய சின்னங்களை ஒதுக்க வேண்டும்.
வாக்களிப்பதற்காக பணம் வாங்கியதாக சந்தேக மற நிரூபிக்கப்பட்ட வாக்காளர்களுக்கு அடுத்த தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை பறிக்க வேண்டும். உண்மையான ஜனநாயம் மலர்வதற்கு உலகில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் நடைமுறையில் விகிதாச்சார தேர்தல் முறையை செயல்படுத்த வேண்டும்.
தேர்தல் ஆணையம் இது போன்ற சீர்திருத்தங்களை ஏற்படுத்தாத வரையில் நியாயமான தேர்தல் நடைபெறாது. ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்திவைத்தது யாரோ ஒரு தரப்பினரை திருப்திபடுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே மக்கள் பார்வையில் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story