என் மலர்
செய்திகள்

சிதம்பரத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியில் சாப்பிட்ட 34 பேருக்கு வாந்தி-மயக்கம்
சிதம்பரத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியில் சாப்பிட்ட 34 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிதம்பரம்:
சிதம்பரம் செங்கல்மேடு பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவர் தனது மகள் அன்புக்கரசியை நாகை மாவட்டம் திருக்கடையூரை சேர்ந்த திருநாவுக்கரசுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
அன்புக்கரசி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். திருக்கடையூரில் நேற்று வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி செங்கல்மேடு பகுதியில் இருந்து உறவினர்களை அழைத்து கொண்டு திருக்கடையூருக்கு அன்பழகன் சென்றார்.
வளைகாப்பு நிகழ்ச்சியில் உணவு பரிமாறப்பட்டது. அன்பழகனின் உறவினர்கள் உணவை சாப்பிட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து செங்கல்மேடு திரும்பினர்.
இரவில் 34 பேருக்கும் திடீரென்று வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவர்களில் நீலாம்பாள் என்பவர் மேல்சிகிச்சைக்காக ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அதில் வளைகாப்பு நிகழ்ச்சியின் போது ஈயம்பூசாத பாத்திரத்தில் தயார் செய்யப்பட்ட உணவை சாப்பிட்டதால் ஒவ்வாமை காரணமாக 34 பேருக்கும் வாந்தி-மயக்கம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story