என் மலர்
செய்திகள்

பாங்காங்கில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 1½ கிலோ தங்க பிஸ்கட் கடத்தல்
பாங்காங்கில் இருந்து சென்னைக்கு நேற்றி நள்ளிரவு பயணிகள் வந்த விமானத்தில் 1½ கிலோ தங்க பிஸ்கட்கள் கடத்திய நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்
ஆலந்தூர்:
பாங்காங்கில் இருந்து சென்னைக்கு நேற்று நள்ளிரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ராமநாதபுரத்தை சேர்ந்த அஜ்மல்கான் வைத்திருந்த கைபையை சோதனை செய்த போது தங்க பிஸ்கட்டுகளை மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது. மொத்தம் 14 தங்கம் பிஸ்கட்டுகள் இருந்தது. இதன் எடை 1½ கிலோ ஆகும்.
இதையடுத்து தங்க பிஸ்கட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அஜ்மல் கானிடம் விசாரணை நடந்து வருகிறது.

Next Story