என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிதம்பரத்தில் கார்-லாரி நேருக்கு நேர் மோதல்: பெண் பலி
    X

    சிதம்பரத்தில் கார்-லாரி நேருக்கு நேர் மோதல்: பெண் பலி

    சிதம்பரத்தில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிந்தார். கார் டிரைவர் காயம் அடைந்தார்.

    சிதம்பரம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்தவர் துர்கா(வயது 60). இவர் வேதாரண்யத்தில் இருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டார். இன்று காலை 8 மணியளவில் இந்த கார் சிதம்பரம் புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது எதிரே ஒரு லாரி வந்தது. திடீரென்று காரும், லாரியும் நேருக்கு பயங்கரமாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் கார் முன் பகுதி சேதமடைந்தது. காரில் வந்த துர்கா உடல்நசுங்கி அதே இடத்தில் பலியானார். கார் டிரைவர் படுகாயம் அடைந்தார்.

    இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் காயமடைந்த டிரைவரை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    Next Story
    ×