என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிதம்பரத்தில் இன்று எச்.ராஜா உருவபொம்மை எரிப்பு: காங்கிரசார் போராட்டம்
    X

    சிதம்பரத்தில் இன்று எச்.ராஜா உருவபொம்மை எரிப்பு: காங்கிரசார் போராட்டம்

    அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை விமர்சித்து பேசிய பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து காங்கிரஸ் சார்பில் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்து வருகிறது.

    சிதம்பரம்:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை விமர்சித்து பேசிய பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து காங்கிரஸ் சார்பில் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்து வருகிறது.

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் எச்.ராஜாவை எதிர்த்து இன்று போராட்டம் நடைபெற்றது. சிதம்பரம் காந்தி சிலை அருகே காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டனர்.

    நகர தலைவர் ராஜேந்திரன் தலைமையில் அவர்கள் எச்.ராஜாவுக்கு எதிராக கோ‌ஷமிட்டனர். பின்னர் திடீரென்று எச்.ராஜாவின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இதுதொடர்பாக சிதம்பரம் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×