என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருவேப்பிலங்குறிச்சி அருகே பஸ் கண்டக்டரை தாக்கி கொலை மிரட்டல்: வாலிபர் கைது
    X

    கருவேப்பிலங்குறிச்சி அருகே பஸ் கண்டக்டரை தாக்கி கொலை மிரட்டல்: வாலிபர் கைது

    கருவேப்பிலங்குறிச்சி அருகே பஸ் கண்டக்டரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள சக்கரமங்கலத்தை சேர்ந்தவர் மேகராஜன் (வயது 37), பஸ் கண்டக்டர். இவர் நேற்று முன்தினம் விருத்தாசலத்தில் இருந்து தேவங்குடி நோக்கி சென்ற அரசு பஸ்சில் கண்டக்டராக பணியில் இருந்தார்.

    அப்போது தேவங்குடியை சேர்ந்த மணிகண்டன் (27) என்பவர் படியில் நின்று பயணம் செய்தார். அவரை மேலே ஏறி வருமாறு பலமுறை மேகராஜன் கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் மணிகண்டன் ஆத்திரமடைந்து மேகராஜனை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து மேகராஜன் கருவேப்பிலங்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
    Next Story
    ×