என் மலர்
செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு 1-ந் தேதிமுதல் வழங்கப்படுகிறது
அரியலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பழைய குடும்ப அட்டையை மாற்றி புதிய குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) நாளை மறுநாள் (1.4.2017 தேதி) முதல் வழங்கப்படவுள்ளது.
அரியலூர்:

முதற்கட்டமாக நியாயவிலைக் கடையில் அலைபேசி எண்ணை பதிவு செய்த குடும்ப அட்டைதாரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட குடும்ப அட்டைதாரரின் அலைபேசி எண்ணிற்கு ‘ஸ்மார்ட் கார்டு தயாராக உள்ளது’ குறித்து குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படும்.
எனவே, அலைபேசி எண்ணை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்கள், குடும்ப உறுப்பினர்களில் ஒருவரது அலைபேசி எண்ணை தங்கள் பகுதிக்கான நியாயவிலைக் கடை விற்பனையாளிடம் கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது என கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

Next Story