என் மலர்
செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: வயலில் கருப்பு கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகையில் வயலில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழ்வேளூர்:
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், வடகாடு, நல்லாண்டார் கொல்லை உள்ளிட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதை கண்டித்து விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
அதிகாரிகளின் சமரச பேச்சு வார்த்தையை தொடர்ந்து போராட்டம் தற்போது கைவிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. இந்த திட்டம் நாகையிலும் செயல்படுத்தப்பட உள்ளது.
இம்மாவட்டத்தில் 9 இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து நாகை மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள சித்தாய்மூரில் விவசாயிகள் வயலில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினார்கள்.
தி.மு.க. விவசாய அணி மாவட்ட பொறுப்பாளர் பழனியப்பன் தலைமை தாங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கோஷம் எழுப்பினார்கள்.

இந்த திட்டத்தை எதிர்ப்பை மீறி செயல்படுத்தினால் ஹைட்ரோ கார்பன் எரிவாயு குழாயை உடைத்து எறிந்து போராட்டம் நடத்தப்போவதாகவும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story