என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிலாடுதுறை ஒன்றிய அலுவலக பெண் உதவியாளர் தற்கொலை
    X

    மயிலாடுதுறை ஒன்றிய அலுவலக பெண் உதவியாளர் தற்கொலை

    மயிலாடுதுறை ஒன்றிய அலுவலக பெண் உதவியாளர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை சீனுவாசபுரம் வள்ளியம்மை நகரில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன். கவரிங் நகை கடை வைத்துள்ளார்.இவருக்கும் மதுக்கூரை சேர்ந்த ஜெய சூர்யாவிற்கும் கடந்த 4½ ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை.

    ஜெயசூர்யா மயிலாடு துறை ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 23-ந் தேதி அலுவலகத்தில் எலி மருந்து தின்று விட்டார்.

    பின்னர் தனது பெற்றோரை பார்க்க திருவாரூருக்கு பஸ்சில் சென்றார். அப்போது தனது தந்தையிடம் எலி மருந்து தின்று விட்டதாக கூறி உள்ளார்.உடனே அவரது பெற்றோர் திருவாரூர் பஸ் நிலையத்தில் காத்திருந்தனர்.

    அப்போது பஸ்சில் இருந்து இறங்கிய ஜெயசூர்யா மயக்கமடைந்தார். அவரை திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

    இது குறித்து மயிலாடுதுறை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருமணமாகி 4½ வருடத்தில் ஜெயசூர்யா இறந்ததால் மயிலாடுதுறை உதவி கலெக்டர் சுபாநந்தினி விசாரணை நடத்தி வருகிறார்.

    குழந்தை இல்லாத ஏக்கத்தில் ஜெயசூர்யா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வரதட்சணை கொடுமையா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×