என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடிகர்களை நிற்க வைத்த விவகாரம்: மத்திய மந்திரி அருண் ஜெட்லிக்கு முத்தரசன் கண்டனம்
    X

    நடிகர்களை நிற்க வைத்த விவகாரம்: மத்திய மந்திரி அருண் ஜெட்லிக்கு முத்தரசன் கண்டனம்

    டெல்லியில் தமிழக விவசாயிகள் கோரிக்கை தொடர்பாக மத்திய மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்த நடிகர்களை இருக்கையில் அமர வைக்காமல் நிற்க வைத்து பேசிய சம்பவம் மிகவும் கண்டனத்திற்குரியது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
    சீர்காழி:

    சீர்காழிக்கு வருகை தந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    இலங்கையில் லைக்கா நிறுவனம் சார்பில் ஈழத்தமிழர்களுக்கு வீடுகள் வழங்கும் விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த பயணத்தை ரத்து செய்த ரஜினிகாந்தின் முடிவு வரவேற்கத்தக்கது. இந்த நிலையில் லைக்கா நிறுவன நிர்வாகிகள், அரசியல் கட்சியினர் சுயலாபத்திற்காக இலங்கை செல்லக் கூடாது என்று ரஜினிகாந்தை வற்புறுத்தியதாக கூறுவது கண்டனத்திற்குரியது.

    சிவகங்கை மாவட்ட அகழ்வாராய்ச்சி கண்காணிப்பாளர் இடமாற்றத்தை ரத்து செய்து மீண்டும் அவரை பணியமர்த்த வேண்டும். டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக நடிகர்கள் விஷால், பிரகாஷ்ராஜ், ரமணா, இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோர் மத்திய மந்திரி அருண் ஜெட்லியை நேரில் சந்தித்து பேசினர்.


    அப்போது அவர்களை மத்திய மந்திரி இருக்கையில் அமர வைக்காமல் நிற்க வைத்து பேசினார். இது மிகவும் கண்டனத்திற்குரியது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×