என் மலர்
செய்திகள்

சோழிங்கநல்லூரில் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் 2 பேர் விபத்தில் பலி
சோழிங்கநல்லூரில் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் 2 பேர் விபத்தில் பலியாகினர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவான்மியூர்:
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அருண்குமார் சத்தோஜி (20), சவுரவ் சர்க்கா (20). இவர்கள் இருவரும் நண்பர்கள். சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.செம்மஞ்சேரியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். நேற்று இரவு 10 மணியளவில் சோழிங்கநல்லூர் கிராம நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அதிவேகமாக சென்றதால் ரோட்டின் குறுக்கே இருந்த வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் மோதியது. அதே வேகத்தில் ரோட்டின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.
இதில், அருண்குமார் சத்தோஜியும், சவுரவ் சர்க்காவும் மண்டை பிளந்து ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பலியாகினர். தகவல் அறிந்ததும் கிண்டி போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
Next Story






