என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோழிங்கநல்லூர் அருகே வேன் மோதி தொழிலாளி பலி
    X

    சோழிங்கநல்லூர் அருகே வேன் மோதி தொழிலாளி பலி

    சோழிங்கநல்லூர் அருகே வேன் மோதி தொழிலாளி பலியானார். இது குறித்து கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவர் சரத்குமாரை கைது செய்தனர்.
    திருவான்மியூர்:

    சோழிங்கநல்லூர், காந்தி நகரை சேர்ந்தவர் செல்வம் (55) தொழிலாளி. இவர், நண்பர் ஆனந்துடன் பேசியபடி ராஜீவ்காந்தி சாலையை கடக்க முயன்றார். அப்போது கேளம்பாக்கத்தை நோக்கி சென்ற டெம்போ வேன் இருவர் மீதும் மோதியது. இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆனந்த் படுகாயம் அடைந்தார். இது குறித்து கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவர் சரத்குமாரை கைது செய்தனர்.

    பள்ளிக்கரணை, தசரதன் தெருவை சேர்ந்தவர் மதிவாணன் (42) எலக்ட்ரீசி யன். இன்று காலை அவர் மேடவாக்கத்தில் கட்டிட பணியில் ஈடுபட்டார். அப்போது மின்சாரம் தாக்கி பலியானார்.

    Next Story
    ×