என் மலர்
செய்திகள்

சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை: வாலிபர் கைது
மயிலாடுதுறை அருகே சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை ஒத்தசரகு தெருவை சேர்ந்த 16 வயது சிறுமி திடீரென மாயமானார். இது குறித்து அவரது தந்தை மயிலாடுதுறை போலீசில் புகார் அளித்தார்.
போலீஸ் விசாரணையில் சிறுமியை அதே பகுதியை சேர்ந்த அன்பரசன் மகன் விமல் (வயது 21) கடத்தி சென்றது தெரிய வந்தது. அவர்கள் மதுரையில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மதுரை சென்ற மயிலாடுதுறை போலீசார் விமலையும், சிறுமியையும் மயிலாடுதுறை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி நடைபெற்ற மருத்துவ பரிசோதனையின் போது சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர் நாகை மகளிர் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சிறுமியை கர்ப்பமாக்கிய விமலை போலீசார் கைது செய்தனர்.

Next Story