என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டினபாக்கத்தில் லாரி மோதி வாலிபர் பலி
    X

    பட்டினபாக்கத்தில் லாரி மோதி வாலிபர் பலி

    பட்டினபாக்கத்தில் லாரி மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருவான்மியூர்:

    துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (28) இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் துரைப்பாக்கத்தில் இருந்து பாரிமுனை நோக்கி சென்றார். பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி நகர் காமராஜர் சாலையில் சென்ற போது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் சீனிவாசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து நடந்தவுடன் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×