என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் பகுதியில் சாய தொழிற்சாலை கழிவுநீரால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம்
    X

    காஞ்சீபுரம் பகுதியில் சாய தொழிற்சாலை கழிவுநீரால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம்

    காஞ்சீபுரம் பகுதியில் சாய தொழிற்சாலைகளின் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுவதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    காஞ்சீபுரம்:

    தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் தீனன் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் ஒரு மனு கொடுத்தார்.

    காஞ்சீபுரத்தில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு கைத்தறி பட்டு பூங்கா சாய தொழில் கூடம் கடந்த 2010-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு துவக்கப்பட்டது. பின்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டு பூங்கா லிமிடெட் என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டு துவக்கி வைக்கப்பட்டது. ஆனால் அது இன்றுவரை செயல்படவில்லை.

    மேலும் சாயத்தொழில் சுற்றுப்புற சூழலை கருத்தில் கொண்டு காஞ்சீபுரம் அடுத்த ஐயம்பேட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அவர்கள் குடி இருக்கும் வீட்டிலேயே வீட்டு மின்சாரத்தை பயன்படுத்தி தொடர்ந்து சாய தொழில் நடந்து வருகின்றனர்,

    மேற்படி வீட்டில் இயங்கி வரும் தொழிற்சாலையின் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் வீட்டு கழிவு நீர் வெளியேரும் டிரைனேஜ் மூலம் வெளியேறுவதால் வீட்டு இணைப்புகளில் கழிவுநீர் புகுந்து கொசு உற்பத்தியாகி தொற்று நோய், வி‌ஷ காய்ச்சல், யானைக்கால் நோய் போன்ற மனித உயிருக்கு ஆபத்தாகும் சூழ்நிலை உள்ளது.

    காஞ்சீபுரம் அம்மங்காரத் தெரு, பிள்ளையார்பாயைம், வாலாஜாபாத், ஐயன் பேட்டை பகுதிகளில் சாய தொழிற்சாலைகளின் கழிவு நீர் குளங்களில் கலப்பதால் அருகில் வசிப்பவர்களுக்கும் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

    ஆகவே மாவட்ட நிர்வாகம் இதனை கருத்தில்கொண்டு சுற்றுப்புறச்சூழலை பாதிக்கும் இதுபோன்ற சாய தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுத்து தொற்று நோய் பரவாமல் தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×