என் மலர்

  செய்திகள்

  தேனியில் ஓ.பி.எஸ். கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்
  X

  தேனியில் ஓ.பி.எஸ். கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேனி அருகே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
  தேனி:

  தேனி அருகே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் அருகே உள்ள கரும்பு காட்டுக்குள் புகுந்து தப்பி ஓடினர்.

  மேலும் இந்த தாக்குதலில் ஓ.பி.எஸ் உட்பட கட்சி நிர்வாகிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். ஓ.பி.எஸ். அணி சார்பில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னர், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் வழிபாடு நடத்திய ஓ.பி.எஸ். சொந்த ஊருக்கு திரும்பிய போது தேனி அருகே அரைப்படிதேவன்பட்டி என்ற இடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.  அதிமுக-வைச் சேர்ந்த சசிகலா ஆதரவாளர்களே ஓ.பி.எஸ் கார் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஓ.பன்னீர்செல்வம் கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
  Next Story
  ×