என் மலர்

  செய்திகள்

  பெரம்பலூரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
  X

  பெரம்பலூரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெரம்பலூரில் நிலவிவரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  பெரம்பலூர்:

  பெரம்பலூர் மாவட்ட பா.ம.க. சார்பில் மாவட்டத்தில் நிலவிவரும் கடுமையான குடிநீர் பிரச்சினையை போக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய மாநிலஅரசுகளை வலியுறுத்தி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலையின் முன்பு போராட்டம் நடைபெற்றது.

  மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.  இதில் மாநில துணைத்தலைவர்கள் அனுக் கூர் ராஜேந்திரன், தங்கதுரை மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணபிரான், மாநிலபொதுகுழு உறு ப்பினர், அன்புச் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  மாவட்ட வன்னியர் சங்க தலைவர் தர்மராஜ் மாவட்ட துணை தலைவர் சின்னதுரை,சின்னாறு மாவட்ட துணை செயலாளர்கள் கண்ணன், துரை, தேவராஜன்,ராஜேந்திரன் தேர்தல் பணி குழு தலைவர் சத்தியசீலன், வக்கீல் இளங்கோவன், செய்தி தொடர்பாளர் வடமலை, நகரதலைவர் பிரகாஷ், நகர இளைஞர் அணி செயலாளர், இமையவ ரம்பன்,ஒன்றிய செயலாளர்கள் பிரபு, சுகுமார், வேப்பூர் ஒன்றிய செயலாளர்கள், செல்வக் குமார்,கார்த்திக், ஞானஜோதி, ராஜ்குமார், ஆலத்தூர் ஒன்றிய செயலாளர்கள் அருள், ஜெயபிரகாஷ், வேப்பந்தட்டை ஓன்றிய செயலாளர்கள் ராஜ்குமார், மாநில, மாவட்ட,ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×