என் மலர்
செய்திகள்

தந்தை திட்டியதால் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை
பரீட்சையில் ஒழுங்காக படிக்க வேண்டும் என்று தந்தை திட்டியதால் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் விவேகானந்தன். இவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். இவரது மகன் குரு பிரசாத் (வயது 15). தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. பரீட்சைக்கு ஒழுங்காக படிக்க வேண்டும் என்று தந்தை திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த மாணவன் குரு பிரசாத் இன்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டர். இதுகுறித்து மகேந்திரமங்கலம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Next Story