search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பழனி நகர் பகுதியில் போதை பொருட்கள் விற்ற கும்பல் கைது
    X

    பழனி நகர் பகுதியில் போதை பொருட்கள் விற்ற கும்பல் கைது

    பழனி நகர் பகுதியில் போதை பொருட்கள் விற்ற கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பழனி:

    பழனி நகரில் பல்வேறு கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், பழனி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மருதமுத்து, அன்னலட்சுமி, திலகா மற்றும் போலீசார் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது ராஜாஜி ரோடு, காந்திரோடு, காந்தி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கடை நடத்தி வரும், சதக்கத்துல்லா, கார்த்திகேயன், சிவக்குமார், ராஜா, சரவணன், ஹரி ஆகிய 6 பேரின் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இவர்களிடமிருந்து புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×