என் மலர்
செய்திகள்

கொளத்தூரில் தொழில் அதிபர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
கொளத்தூரில் தொழில் அதிபர் வீட்டில் நகை-பணம் கொள்ளை வெளியே நின்ற மோட்டார் சைக்கிளையும் எடுத்து சென்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாதவரம்:
கொளத்தூர் ஸ்ரீகணபதி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் ரியல் எஸ்டேட் தொழில் அதிபர். இவரது வீடு 2 மாடி கொண்டது. நேற்று இரவு வீட்டின் முதல் தளத்தை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மேல் மாடி யில் தூங்கினார்.
பின்னர் இன்று காலை கீழே வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பாரத்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் மற்றும் வீட்டில் இருந்த எல்.இ.டி. டி.வி. ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
மேலும் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளும் சாவியுடன் மாயமாகி இருந்தது. கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.
இது குறித்து ராஜமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story