என் மலர்

    செய்திகள்

    சங்கரன்கோவில் அருகே லாரி மோதி தச்சு தொழிலாளி படுகாயம்
    X

    சங்கரன்கோவில் அருகே லாரி மோதி தச்சு தொழிலாளி படுகாயம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சங்கரன்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தச்சு தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலை அடுத்த கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள கரிசல்குளம் ஆலமநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 37). தச்சு தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வேலையை முடித்து விட்டு கலிங்கப்பட்டியில் இருந்து திருவேங்கடம் நோக்கி  மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சத்திரப்பட்டி விலக்கு அருகே சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியை சீனிவாசன் முந்தி செல்ல முயன்றார்.  அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி சீனிவாசன் கீழே விழுந்ததில் அவரது இடது கை மீது லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. 

    இதில் சீனிவாசனின் கை நசுங்கியது.  உடனே அந்த வழியாக சென்றவர்கள் சீனிவாசனை மீட்டு  சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து  கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×